தேவேந்திரகுல வேளாளர் ஆன்மீகப் பண்பாட்டு அடையாளம்-1

posted in: ஆவணங்கள் | 0

பொதுச் சமூகத்தின் வெளிச்சத்தில் அறியப்படாத தகவலாய் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் பாரம்பரிய ஆன்மீக உறவு உள்ளது.

தமிழ் நாட்டின் தென்கொடியில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அமைந்துள்ளது.

இங்குள்ள வங்காள விரிகுடாக் கடலோரம் முருகன் கோயில் அமைந்துள்ளது.கடலின் அலை முருகனின் காலடியைத் தொட்டுச் செல்லும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.

எனவே, திருச்சீரலைவாய் என்ற காரணப் பெயரால் அழைக்கப்பட்ட இவ்வூர் கால ஓட்டத்தில் திருச்செந்தூர் என மருவியதாகக் கூறப்படுகிறது.

பழம் பெருமை வாய்ந்த இக்கோயிலின் மேலக் கோபுர வாயிலில் அருகே கோட்டைத் தெரு உள்ளது.

இங்கு தேவேந்திரகுல வேளாளர்களுக்குச் சொந்தமான எட்டு மடங்கள் உள்ளன.இம்மடங்களின் காலவரிசை கி.பி.1881 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இம் மடங்கள் ஒவ்வொன்றும் தனிச் சுற்றுச் சுவருடன் ஏறத்தாழ ஒரு ஏக்கர் நிலப் பரப்பில் உள்ளன.

ஒவ்வொரு மடமும் ஏறத்தாழ 100 கிராமங்களுக்கு மேல் பாத்தியப்பட்டதாகும்.

1.ஸ்ரீவைகுண்டம் சுற்றியுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் சீவந்தி நாட்டார்கள் என்றும்,

2.தூத்துக்குடி அருகில் உள்ள ஆத்தூர் சுற்றியுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் கொற்கை      குடவள நாட்டார்கள் என்றும்

3.திருநெல்வேலி தென்கலம் அதன் அருகில் உள்ள அக்கனாயக்கன் பட்டி சுற்றியுள்ள தேவேந்திரகுல    வேளாளர் சமூக மக்கள் வீர நாட்டார்கள் என்றும்

4. ஆறுமுக நேரி முதல் அய்யனார்புரம் வரை தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் உள்ள                   நாட்டார்கள் என்றும்

5. நாங்குனேரி சுற்றியுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் பருத்திகோட்டை நாட்டார்கள்           என்றும்

6.தூத்துக்குடி பகவந்தனை சுற்றியுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் சிக்கை நாட்டார்கள்      என்றும்

7.ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பராக்கர பாண்டி சுற்றியுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக                மக்கள் செலுகை நாட்டார்கள் என்றும்

8.தூத்துக்குடி, திருநெல்வேலியில் சில ஊர்களில் வாழும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள்          கோலிய நாட்டார்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்

வைகாசி விசாகம், திருக்கார்த்திகை போன்ற திருவிழாக் காலங்களில் அக்கால வழக்கப்படி கிராமங்களில் இருந்து மாட்டு வண்டியில் குடும்பம் குடும்பமாக முதல் நாள் வந்து தங்குவர். மறு நாள் விழாவில் பங்கேற்று முருகனை வழிபட்டு ஊர் திரும்புவதை மரபாகக் கொண்டுள்ளனர்.

அருள்மிகு முருகன் அவதரித்த வைகாசி விசாகத் திருநாளைத் தேவேந்திரகுல வேளாளர்கள் தங்கள் வாழ்நாளின் முக்கிய நாளாகக் கருதுகின்றனர்.

இங்குள்ள மண்டபத்தின் கல்தூண்களில் தேவேந்திரகுல வேளாளர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.திருமணம் முடிந்தவுடன் முதலில் திருச்செந்தூர் முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். குழந்தை பிறந்த உடன் முதல் தலைமுடி காணிக்கை செலுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 

Photo -1 Photo -2 Photo -3 Photo -4 Photo -5 Photo -6 Photo -7 Photo -8 Photo -9 Photo -10

Leave a Reply